May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறையின் மூலம் இணையவழி அங்கக வேளாண்மை பயிற்சி

கோவை, மார்ச் 16

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறையில் இணையவழி மற்றும் நேரடியாக அங்கக வேளாண்மை பயிற்சி வரும் 22.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 – 1.00 மற்றும் 2.00 – 4.30 வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை, களை மேலாண்மை, இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத் திட்டம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளது.

இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.590/-, செலுத்தும் வங்கி விவரம் பேராசிரியர் மற்றும் தலைவர் (Professor and Head), State Bank of India, TNAU Branch – A/C. No. 38918523789, IFSC Code – SBIN0002274. மேற்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில்நுட்ப கையேடு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். 22.03.2022 அன்று பயிற்சி துவங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னர் இணைப்பு (Link) அனுப்பப்படும்.

தங்களின் மின்னஞ்சல் மற்றும் முகவரியை பின்கோடுடன் கீழ்க்கண்ட இத்துறையின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

பேராசிரியர் மற்றும் தலைவர், வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003. மின்னஞ்சல் : organic@tnau.ac.in – தொலைபேசி எண்கள் : 0422 6611206 / 0422 2455055. (The Professor and Head, Department of Sustainable Organic Agriculture, Tamil Nadu Agricultural University, Coimbatore – 641 003).

Spread the love