August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வளம் கொழிக்கும் கரி மூட்டம் தொழில்

கரிமூட்டத்திற்கு பயன்படுத்தப்படும் சீமைக்கருவேல் 1950க்கு பின் எரிபொருளாக அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய நாட்டு தாவரம். கடந்த 72 ஆண்டுகளில், தென்மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் படர்ந்து விரிந்து வருகின்ற தாவரமாக உள்ளது. இதனால் 25% நிலங்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்து வருகிறது. இதை அழிக்க நீதிமன்ற உத்தரவு இட்டு உள்ளது. இது ஒரு புறம் பாதிப்பாக கருதப்பட்டாலும் மறுபுறம் வறட்சி மாவட்ட விவசாயிகளுக்கு (விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள்) வளம் கொழிக்கும் தொழிலாக உள்ளது.

கரிமூட்டம் போடுவது எப்படி?
இந்த தொழிலை தனியாக செய்ய முடியாது. 10 முதல் 15 பேர்கள் கொண்ட குழுவாக தான் செய்ய முடியும். தரிசான நிலங்களில் வளர்ந்த சீமைக் கருவேல், நாட்டு கருவேல் மரங்களை வெட்டி, நல்ல தடிமனான கட்டைகளை நன்றாக 40 நாட்கள் வரை காய வைத்து, அதனை கூம்பு வடிவத்தில் அடிக்கி, அதன் மேல் வைக்கோல் பரப்பி, சேறு பூசி, அடிப்பாகத்தில் துளை இட்டு அதன்வழி யாக தீ வைத்து, அந்த துளை முடிவிட வேண்டும். இதில் புகை வெளியே வந்தால் விறகுகள் எரிந்து சாம்பலாகி விடும். இதனால் புகை வெளியே வாராமல் 9 நாட்கள் வரை இரவு பகலாக கண் விழித்து (SHIFT) முறையில் பாதுகாக்க வேண்டும். பின்னர் தண்ணீர் தெளித்து மரக் கரிகளை சேகரிக்க வேண்டும். கரிமூட்டத்தில் இருந்து “தூர் கரி, உருட்டு கரி, பக்கோடா கரி, குச்சி கரி என பலவிதமான கரிகள் கிடைக்கும். எரிந்த சாம்பல் கூட விற்பனை செய்யலாம். 3.5 டன் விறகு போட்டு எரித்தால் ஒரு டன் கரி கிடைக்கும். கரி மூட்டத்தில் இருந்து வெளிவரும் வாயுவைக் குளிர்வித்து கிடைக்கும் திரவத்துடன் குறிப்பிட்ட அளவு நீர் சேர்த்து பயிரைத் தாக்கும் பூச்சிகளை விரட்டும் பூச்சி விரட்டி “உட் வினிகர்” தயாரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த கரிமூட்ட தொழிலை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளர்களும் உள்ளனர். இந்த கரிமூட்ட கரிகள், மகாராஷ்டிரா, தில்லி, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ரயில் மூலமாகவும், லாரிகள் மூலமாக அனுப்பபடுகிறது. ஒரு டன் கரி 12,000 முதல்15,000 வரை விற்கபடுகிறது. கரிமூட்ட தொழில் மிகவும் ரிஸ்க்கான தொழில். ஆனால், விவசாய வேலைகள் இல்லாத காலங்களில் கிராம புற விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love