ஐநா அறிக்கையில் தகவல்
நியூயார்க், மே 20
2021ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான அறிக்கையினை ஐநா வெளியிட்டது.
இதில் முக்கியமாக கோவிட் நெருக்கடிக்கு முன்பிருந்ததை விட மேற்படி காலாண்டில் உலக வர்த்தகம் அதிகமாக இருந்ததாகவும் அதாவது 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டை விட இந்த காலாண்டில் 3 சதம் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும் ஐநா தெரிவித்துள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளின் வலுவான ஏற்றுமதி செயல்திறனால் இந்த காலாண்டில் வர்த்தகத்தின் மீள் உருவாக்கம் தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடுகளின் தனிப்பட்ட செயல்பாட்டை பொறுத்தவரை மேற்படி காலாண்டில் உலகின் பிற பெரிய பொருளாதார நாடுகளைவிட இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கியதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2020-ம் ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடுகையில் சரக்கு இறக்குமதி 45 சதமும், சேவை இறக்குமதி 14 சதமும் அதிகரித்து உள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை சரக்கு மற்றும் சேவை முறையே 26 மற்றும் 2 சதம் அதிகரித்து இருப்பதாக ஐநாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.