October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

கடலூர், அக்.9

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரகஉள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவினை; மாவட்டதேர்தல் அலுவலர்ஃ மாவட்டஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம்இ.ஆ.ப.அவர்கள் பல்வேறு பகுதி வாக்குச் சாவடி மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ் அருங்குணம் ஊராட்சி அ.குச்சிப்பாளையம் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தினையும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணம் தவிழ்ந்த புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்கையில்:

வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்காளர்கள் தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதையும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் வாக்குச் சாவடி நுழைவாயிலில் வாக்காளர்களுக்கு கிருமி நாசினிஅளித்து உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனதெரிவித்தார்.

தொடர்ந்து அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறையின் உறுதித் தன்மை குறித்தும் வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேஜைகள் அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Spread the love