June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பினை வழங்கிட ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் உறுதி

புது தில்லி, மே 5

கோவிட் தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 5 சத பிரீமிய சலுகையை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் கோவிட் தொற்று தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்கிட நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, புதிய பாலிசிகளை வாங்கும் அல்லது பழைய பாலிசிகளை புதுப்பிக்கும் வாடிக்கையாளர்கள் கோவிட் தடுப்பூசியை போட்டிருந்தால் அவர்களுக்கு பிரீமியத்தில் 5 சத சலுகையை அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் அனில் அம்பானி தலைமையின்கீழ் செயல்படும் ரிலையன்ஸ் கேப்பிட்டலின் 100% துணை நிறுவனமாகும்.

Spread the love