மெத்தைலோ பாக்டீரியம் (பி.பி.எப்.எம்)
மெத்தைலோ பாக்டீரியா பொதுவாக பி.பி.எப்.எம் (PPFM-Pink Pigmented Facultative Methylotrophs) என்று அழைக்கப்படுகிறது. மெத்தைலோபாக்டீரியா பெரும்பாலும் இலைகள், வேர்கள் மற்றும் தாவரங்களின் உட்புறம் வாழும் தன்மையுடையவை. இவை இலைகளில் இருந்து வெளியாகும் மெத்தனால் என்ற எரிசாராயத்தை உணவாக உட்கொண்டு பயிருடன் வாழ்ந்து பயிர்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்கின்றன.
குணாதிசயங்கள் :
§ நிறமோ இளஞ்சிவப்பு
§ இருப்போ இலைப்பரப்பு
§ உணவோ எரிசாராயம்
§ பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பிறப்பிக்கும்
பயன்கள் :
§ விதை முளைப்புத்திறனை அதிகரிக்கின்றது.
§ நாற்றுகளின் வளர்ச்சியை விரைவு படுத்துகின்றது.
§ பயிர் வளர்ச்சி ஊக்கியினை உற்பத்தி செய்கிறது.
§ பயிரின் துரித வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது.
§ யூரியாவை சிதைவடையச் செய்யும் நொதியினையும் வெளிப்படுத்துகின்றது.
§ பூக்கும் காலம் மற்றும் காய்களின் அறுவடை காலத்தை குறைக்கின்றது.
§ பயிர் மகசூல் 10 விழுக்காடு அதிகரிக்கின்றது
§ நெல் மற்றும் காய்கறி பயிர்களுக்கு மிகவும் உகந்தது.
§ பயிருக்கு வறட்சியைத் தாங்கும் வல்லமையைத் தருகின்றது.
§ பயிரின் வாட்டத்தை போக்குகின்றது.
பயன்படுத்தும் முறை :
விதை நேர்த்தி
பரிந்துரைக்கப்பட்ட விதைஅளவை 50மிலி திரவ நுண்ணுயிரில் நன்கு கலந்து 5 முதல் 10 நிமிடம் நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.
இலைகளில் தெளித்தல்
காலை அல்லது மாலை நேரங்களில் ஏக்கருக்கு 400 மில்லி திரவ நுண்ணுயிரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கவும்.
அளவு :
§ இரண்டு மில்லி நுண்ணுயிர் திரவம்ஃஒரு லிட்டர் தண்ணீர்
§ ஏற்ற தெளிப்பான் : கைத்தெளிப்பான், பூம் தெளிப்பான்
§ ஏற்ற நேரம் காலை அல்லது மாலை
§ தனித்துத்தான் தெளிக்க வேண்டும்.
§ இராசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கக்கூடாது.
இராசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு (அ) பின்பு இந்த நுண்ணுயிர் திரவத்தை தெளித்தல் வேண்டும்.