June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாய்விளங்கம்

வாய்விளங்கம் மாற்றடுக்கில் அமைந்த நீள்வட்ட இலைகளையும் வெள்ளை அல்லது பசு மஞ்சள் நிற மலர்களையும், சிறிய உருண்டையான கனிகளையும் உடைய பெருங்குடி மழைக்காடுகளில் காணப்படும் உலர்ந்த காய்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இலை, வேர்ப்பட்டை, காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. உடல் தேற்றுதல், வயிற்று வாய்வு அகற்றுதல், செரிமானம் மிகுத்தல், உடல் உரமாக்குதல் ஆகிய பண்புகளை உடையது. இலைச்சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து வாய் கொப்பளிக்க தொண்டை கரகரப்பு, வயிற்றுப் புண் ஆகியவை தீரும். வாய்விளங்கம் பொடியை வேளைக்கு ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு நாள் மூன்று வேளை கொடுத்து மறுநாள் விளக்கெண்ணெய் அல்லது பேதி மருந்து கொடுத்து வயிற்றுப் பூச்சிகள் அகலும், வாய் விளங்கம் பொடியைக் கொண்டு பல் தேய்த்து வர பல் சொத்தை, பல் வலி நீங்கும். வாய்விளங்கத்தை நீரில் அரைத்து படைகளில் பூச குணமாகும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love