August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாரத்திற்கு 4நாள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்தது ஓயோ

புது தில்லி, மே 13

இந்தியாவின் முன்னணி ஹோட்டல் புக்கிங் சேவை நிறுவனமான ஓயோ நிறுவனம், கோவிட் தொற்று அதிகமாக பரவும் காரணத்தால் ஊழியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது;

ஓயோ நிறுவனத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நாட்களாக நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சிறிய மாற்றத்துடன் அதாவது புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுப் பிற நாட்களில் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோல் கோவிட் தொற்றுக் காரணமாகப் பலருக்குப் பல விதமான பாதிப்புகள் இருக்கும் நிலையில் ஊழியர்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், சம்பளத்தில் எவ்விதமான பிடித்தமும் செய்யப்பட மாட்டாது என இந்நிறுவனத்தின் தலைவரான ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுமுறை எடுக்கும் போது யாரிடமும் அனுமதி பெறத் தேவை இல்லை, உங்கள் மேனேஜரிடம் தகவல் அளித்தால் மட்டும் போதுமானது. வர்த்தகப் பாதிப்பு, வேலை வாய்ப்பு, இலக்குகள் என எதைப் பற்றியும் மன அழுத்தத்தோடு எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் ரிதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த 4 நாள் வேலை நாள் வழக்கம் அடுத்த 4 வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும், ஜூன் மாதம் நிலைமையை ஆய்வு செய்து தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும். மேலும் அளவில்லா சம்பளத்துடன் விடுமுறை ஜூலை மாதம் வரையில் நடைமுறையில் இருக்கும் என ரிதேஷ் அகர்வால் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

Spread the love