August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாரத்தில் 5 நாட்கள் வேலை சலுகை எல்ஐசி நிறுவனம் அசத்தல்

மும்பை, மே 7

நாட்டின் முன்னணி பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, வரும் மே 10 முதல் அதன் ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற சலுகை அமல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எல்ஐசியின் இந்த அறிவிப்பானது ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி-யின் இந்த அதிரடியான சலுகை குறித்து அனைத்து பாலிசிதாரர்களுக்கும் மற்றும் மற்ற பங்குதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான பொது அறிவிப்பில் அனைத்து எல்ஐசி அலுவலகங்களும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும் என்றும், அலுவலக நேரமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் எல்ஐசி ஊழியர்கள் அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊழியர்களுக்கு 15 முதல் 16 சதம் வரை சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் உட்பட பலவும் விவாதிக்கப்பட்டன. அந்த சமயத்தில் வங்கி ஊழியரக்ளுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் வேளையில், எல்ஐசி ஊழியர்களுக்கும் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான், தற்போது வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.

தற்போது எல்ஐசியில் உள்ள சுமார் 1.14 ஊழியர்கள், இந்த அறிவிப்பால் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஊழியர்கள் தரப்பில், எல்ஐசி டிஜிட்டல் பயன்பாடு என்பது அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் தான் ஊழியர்களுக்கு வேலை செய்யும் நேரத்தினை குறைக்கும் நடவடிக்கையாக, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற நடைமுறையினை ஊழியர்கள் எதிர்பார்த்தனர். இப்படியயாரு நிலையில் தான் எதிர்பார்ப்பினை போலவே நடைமுறைக்கும் வரவுள்ளது.

Spread the love