May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வால்மார்ட் நிறுவனத்தின் புதிய வேளாண் சேவைகள்

உலகின் மிகப்பெரிய நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் சில்லறை வணிகத்தில் (Retail Sales) மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்தியாவின் பெரு நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் தனது சேவைகளை வழங்க புதிய கிளைகளை பரப்பி வரும் இந்த பன்னாட்டு நிறுவனம். கொரோனா தொற்றுக்காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் தன்னுடைய நிறுவன விநியோக சங்கிலி (Supply Chain) உடையாமல் இருக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் அறுவடைக்கு பிந்தைய காலகட்டத்தில் ஏற்படும், இடர்பாடுகளை தவிர்த்து விநியோக சங்கிலி உடைபடாமல் இருக்க சர்வதேச வறண்ட நிலங்களுக்கான ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஆறு மாநில விவசாயிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது.

சுமார் 4 கோடிகள் வரை நிதி உதவி வழங்கி சுமார் 24,000 மேலுள்ள விவசாயிகளை இணைத்து அவர்களுக்கு தேவைப்படும் வேளாண் இடுபொருட்களை வாங்கவும், அவர்களுக்கு தேவைப்படும் பண்ணை கருவிகளை உழவர் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு வழங்கி உதவி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 2 மில்லியன் டாரர்கள் அளவிற்கு நிதியை சர்வதேச வறண்ட நிலங்களுக்கான மையத்திற்கு வழஙகி விவசாயிகளின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கம் வண்ணம் புதிய வணிக மாதிரியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணி புரியும் ஒட்டு பிற நிறுவனங்களான “Professional Assistance for Development Action (pradan), Trickle up, Grameen Foundation India மற்றும் Digital Green India ஆகியவற்றுடன இணைந்து சிறிய அளவிலான வேளாண் சமுதாயங்கள் இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், தற்போதைய புதிய தளவாடங்கள் போக்குவரத்து (Logistics) பயன்படுத்தி தரமான வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் வேளாண் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது ஆந்திரா, மேற்குவங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு உதவி வரும் வால்மார்ட் நிறுவனம் பிற மாநில விவசாயிகளுக்கு தனது சேவைகளை விரிவாக்கம் செய்யும் போது நமது நாட்டின் சிறு, குறு விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடைய பெரிதும் துணைபுரியும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரை: முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத் துறை) மற்றும் ஒருங்கிணைப்பாளர், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Spread the love