ஒன்றரை மாதக் குழந்தை நலம்பெற்றது.
தென்தமிழகத்திலேயே முதல் முறை
சகமனிதரிடமிருந்து கல்லீரல் தானமாகப் பெற்று அதனை நோயாளிக்கு மாற்று கல்லீரலாகப் பொருத்தி சாதனை படைத்துள்ளது மதுரை வேலம்மாள் மருத்துவமனை.
வேலம்மாள் மருத்துவமனை முதல்முறையாக வாழும் ஒருவரிடமிருந்து கல்லீரல் கொடை பெற்று அதனை மாற்றாக வெற்றிகரமாகப் பொருத்தும் இந்தச் சாதனையைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்தமிழகத்திலேயே முதல்முறையாக இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தக் குழந்தை தற்போது முழு நலம்பெற்று மருத்துவமனையிலிருந்து 30.04.2021 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் குழந்தையின் பெற்றோர் வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.