வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
சேலம், மார்ச் 16
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் தினேஷ், எழில், பரத், தனுஷ், அகிலன், பாலகிருஷ்ணன், ஆதிநாதன், ஆலன் ஜேம்ஸ் ஆகியோர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் விவசாயிகளுக்கு வாழைக்குலையில் ஊட்டச்சத்து கரைசல் கட்டுவது எப்படி என்று செயல் விளக்கம் செய்து காட்டினார். வாழைக்குலையில் ஊட்டச்சத்து கரைசல் கட்டுவதன் மூலம் வாழைக்குலையின் எடையை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்றும் வாழை பழத்தின் சுவை அதிகரிக்கும் என்றும் கூறினர். அதனால் வாழைத்தாரை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்ட முடியும் என்றும் கூறினர். மற்றும் வெங்காயத்தை தாக்கும் இலைப்பேனை கட்டுப்படுத்த நீல வண்ண ஒட்டு பொறியை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறுமாறும் அறிவுறுத்தினார். அந்த நீல வண்ண ஒட்டு பொறி இலைப்பேனை கவர்ந்து இழுக்க வல்லது என்றும். அந்த இலைப்பேன் ஓட்டு பொறியில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும், இதனால் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து செலவு குறையும் என்றும் கூறினர்.
Spread the love