June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாழைத்தார் ரூ.3.90 லட்சத்துக்கு விற்பனை

ஈரோடு, மே 5

சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், 2,160 வாழைத்தார் கொண்டு வந்தனர். கதளி ஒரு கிலோ, ரூ.24, நேந்திரன், ரூ.39க்கும் விற்பனையானது. பூவன் தார், ரூ.490, தேன்வாழை, ரூ.580, செவ்வாழை, ரூ.650, ரொபஸ்டா, ரூ.390, மொந்தன், ரூ.200, பச்சைநாடன், ரூ.380, ரஸ்தாளி, ரூ.545க்கும் விலை போனது. விற்பனைக்கு வந்த, 2160 வாழைத்தார்களும், ரூ.3.90 லட்சத்துக்கு விற்பனையானது. ரம்ஜான் நோன்பு காலம் என்பதால், வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

Spread the love