August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாழைத்தார் வரத்து குறைவு

கோவை, மே 10

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலத்தில், விலை உயர்ந்து காணப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடக்கிறது. வெளி மாவட்டங்கள், உடுமலை, ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏலத்தில், பூவம்பழம் தார், ரூ.200 முதல் ரூ.600, செவ்வாழை, ரூ.300 முதல் ரூ.900. கற்பூர வள்ளி, ரூ.150 முதல் ரூ.550, மோரிஸ், ரூ.150 முதல் ரூ.500, நேந்திரன் ஒரு கிலோ, ரூ.42 மற்றும் கதளி கிலோ, ரூ.28க்கும் ஏலத்துக்கு போனது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ஏலம் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால், 700 வாழைத்தார்கள் மட்டும் வரத்து இருந்தது. ஊரடங்கு காரணமாக மதியம், 12.00 மணிக்குள் கடைகள் மூட வேண்டும் என்பதால், 50 சதவீதம் வாழைத்தார்கள் மட்டுமே இறக்குவதால் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும், ரம்ஜான் பண்டிகையையொட்டி விற்பனை களைகட்டியது. கடந்த வாரத்தை விட, வாழைத்தாருக்கு, ரூ.50 முதல் ரூ.100 விலை உயர்ந்து விற்பனையானது என்றனர்.

Spread the love