August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாழையில் சிகோடோக்கா நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

வாழை உலகளவில் பயிரிடப்படும் பழ வகைகளில் பிரதான ஒன்றாகும். அதில் ஏற்படும் சிகோடோக்கா நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க் காரணி
இந்நோய் மைகோஸ்பேரேல்லா மியுசிகோலா என்னும் ஒரு வகைப் பூசணத்தால் தோற்றுவிக்கப்படுகிறது. இதன் பூசண இழைகள் குறுக்குச் சுவர்களைக் கொண்டும், ஊண் வழங்கியின் திசுவறைகளுக்கு இடையேயும், திசுவறைகளின் ஊடேயும் காணப்படும்.

நோயின் அறிகுறிகள்
வாழையைத் தாக்கக்கூடிய இலை நோய்களில் இது மிகவும் முக்கியமானது. இந்நோய் பெரும்பாலும் முதிர்ந்த இலைகளைத் தாக்குகிறது. முதலில் இலைகளில் 5 – 10 மி. மீ நீளமுள்ள, மெல்லியக் கீற்றுக்கள், இளம்பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் நரம்புகளுக்கு இணையாகத் தோன்றும். சில தினங்களில் இந்தக் கீற்றுக்கள் விரிவடைந்து, நீண்ட, வேல் வடிவப் புள்ளிகளாக மாறும். புள்ளிகளின் நடுப்பாகம் சாம்பல் கலந்த பழுப்பு நிறமாகவும், உட்குழிந்தும், கரும்பழுப்பு நிற விளிம்புகளைக் கொண்டும் தென்படும். நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் பொது, பல புள்ளிகள் தோன்றி, ஒன்றோடொன்று இணைந்து இலையின் பெரும் பகுதி தாக்கப்பட்டு இலை விளிம்புகளிலிருந்து உள்நோக்கி கரிந்துக் காய்ந்து விடும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்
இந்நோய்ப் பெரும்பாலும் காற்று மூலம் பரவக் கூடியது. நிலத்தில் விழுந்துக் கிடக்கும் நோய்த் தாக்கிய இலைகளில் கோனிடியாவித்துக்கள் அனேக நாட்கள் உயிரோடு இருக்கக் கூடியவை. தொடர்ந்து அதிக ஈரப்தமும், 24 – 280செ. கி வரையிலான மிதமான வெப்ப நிலையும் காணப்படும் பொது, நோய் அதிகளவில் பரவக் கூடும்.

இலைகளில் வேல் வடிவபுள்ளிகள் தென்படல்

நோய்க்கட்டுப்பாடு
உழவியல் முறைகள் :
நோய் அதிகம் தாக்கிக் காய்ந்துப் பூனை முதிந்த இலைகளை வெட்டி, அப்புறப்படுத்தி, எரித்துவிட வேண்டும். நிலத்தில் விழுந்துக் கிடக்கும்நோய்த் தாக்கியக் காய்ந்துப் போன இலைகள், சத்திகள்போன்றவற்றை அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்.

மருந்துச் சிகிச்சை:
போர்டோ கலவை –1 சதம் அல்லது தாமிர ஆக்ஸிக்குளோரைட் பூசணக்கொல்லி மருந்தை ஒரு லிட்டருக்கு 2.5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். மருந்துக் கலவை துகிள்கள் கீழே உருண்டு விழாதபடி, கலவையுடன் டீபால் அல்லது திரவ வடிவிலிருக்கும் சோப்பையும் கலந்துத் தெளிக்க வேண்டும்.

கட்டுரை ஆசிரியர்கள் : கு.விக்னேஷ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர், கா. கருப்புதுரை, சுனில் சூர்யா, முதுநிலை வேளாண் மாணவர்கள் – தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல் : lakshmikumar5472@gmail.com, தொடர்பு எண்: 82488 33079.

Spread the love