October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாழை விலை கடும் சரிவு

சேலம், அக்.11

சேலம் மாவட்டம், வாழப்பாடி சுற்று பகுதியில் அறுவடை செய்யப்படும் வாழைத்தார், வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், விளைச்சல் அதிகரித்து விற்பனை சரிந்துள்ளது. இதனால், வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது, கடந்த மாதம் ரகத்தைப் பொறுத்து வாழைத்தார், ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையானது. ஒரு வாரமாக, ரூ.100 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்பனையாகிறது. சீப்பு, ரூ.20 முதல் ரூ.50 வரை மட்டும் விற்பனையாகிறது என்றனர்.

Spread the love