June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விக்கிரவாண்டி வட்டாரத்தில் நுண்ணீர் பாசனம் மற்றும் உரமிடுதல் பயிற்சி

விழுப்புரம், ஜூன் 14

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டாரம் வேம்பி கிராமத்தில் விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, தலைமை ஏற்று நுண்ணீர் பாசன திட்டத்தில் அரசு வழங்கும் மானியம் குறித்தும் நெல் சாகுபடியில் இயந்திர நடவு பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கினார்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் டாக்டர் இரா.மாதவன், வரவேற்று விவசாயிகளுக்கு விவசாயம் நல்ல லாபகரமான செய்ய வேண்டும் என்றால் நீர் இன்றியமையாதது ஆகும். நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு அதிகளவில் மானியம் வழங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவிதம் மானியமும் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை துவான் முதலானவைகளை அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நுண்ணீர் பாசனத் திட்டம் அமைத்து விவசாயம் செய்தால் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யலாம். நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் வரைப்படம், அடங்கல், ஆதார் எண், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நிலத்தின் மண் மற்றும் நீர் மாதிரி ஆய்வு முடிவுகள், சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அணுகவும் அல்லது விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயனடையுமாறு விக்கரவாண்டி வேளாண்மை உதவி இயக்குநர் டாக்டர் இரா.மாதவன் தெரிவிததார். அதை தொடர்ந்து பயிற்சியில் நிம்பஸ் நுண்ணீர் பாசன நிறுவனத்தின் டீலர் முபாரக், விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் பயன்கள் மற்றும் சொட்டு பாசனம் மூலம் உரமிடுதல் குறித்தும் விளக்கம் அளித்தார். விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கி.விக்னேஷ் நன்றிவுரை வழங்கினார் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love