August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விக்கிரவாண்டி வட்டாரத்தில் பண்ணை இயந்திரமாக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி

விழுப்புரம், ஜூலை 1

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திமாக்கல் பயிற்சி 40க்கும் மேற்பட்ட விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் விக்கிரவாண்டி அவர்களின் வழிகாட்டுதல் படி செஞ்சியில் உள்ள கோகுல் அக்ரோ டெக் அழைத்து செல்லப்பட்டது. பயிற்சியில் Sonalika நிறுவனத்தின் துணை மேலாளர் ர.ரத்தினசபாபதி, வேளாண் பண்ணை கருவிகள் பயன்பாடுகள் குறித்தும் அரசு வழங்கப்படும் மானியங்களின் விபரங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். அதை தொடர்ந்து கோகுல் அக்ரோ டெக் மேலாளர் சசிகுமார், நேரடி நெல் விதைப்பு கருவி, Super Seeder, Kirloskar பவர் டில்லர், பவர் விடிர் பயன்பாடு குறித்தும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. Kirloskar நிறுவனத்தின் வட்டார மேலாளர் ராஜீவ்காந்தி, பண்ணை கருவிகளுக்கு அரசு வழங்கும் மானியம் பெற வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார் . பண்ணை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு பார்வைக்கு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் நன்றிவுரை வழங்கினார் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love