August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விக்கிரவாண்டி வட்டாரத்தில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

விழுப்புரம், ஜூலை 25

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் / வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் எண்ணாயிரம் கிராமத்தில் பயிற்சி முகாமிற்கு விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்) பெரியசாமி தலைமையேற்று விவசாயிகளிடம் மண் புழு தயாரிக்கும் வழிமுறைகள் குறித்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் குறித்து விளக்கம் அளித்தார். திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவி பேராசிரியர் முனைவர் கோமதி, மண் புழு இரகங்கள் தேர்வு மண் புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள் குறித்து விளக்கம் அளித்தார். உதவி பேராசிரியா நீலாவதி, மாடி தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தென்னை நடவு முறை விதை நேர்த்தி செய்வது குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.சரவணன், வரவேற்று விவசாயிகளிடம் துறையில் உள்ள திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் மானியம் குறித்தும் உழவன் செயலி பயன்கள் மற்றும் மக்காச்சோள சாகுபடி குறித்தும் விளக்கம் அளித்தார். வேளாண்மை அலுவலர் திவ்ய பிரியா, உதவி வேளாண்மை பூங்காவனம அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கி.விக்னேஷ் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love