August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விக்கிரவாண்டி வட்டார விவசாயி களுக்கு மாநில அளவிலான கண்டுனர் சுற்றுலா

விழுப்புரம், ஜூலை 11

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் எண்ணெய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் உள் மாநில அளவிலான கண்டுனர் சுற்றுலாவிற்கு விக்கிரவாண்டி வட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை விக்கிரவாண்டி, வேளாண்மை உதவி இயக்குநர் வழிகாட்டுதல் படி விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவி பேராசிரியர் முனைவர் க.நடராஜன், மணிலா சாகுபடியில் இரக தேர்வு, விதை நேர்த்தி மற்றும் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை வழங்கினார்.

தொழில் நுட்ப வல்லுநர் முனைவர் மீனலட்சுமி, மணிலாவில் பயிரில் மதிப்புகூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கமளித்தார். உதவி பேராசிரியர் ஜனனி ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் அசோலா வளர்ப்பு குறித்து வாழை சாகுபடியில் இரக தேர்வு குறித்தும் விளக்கம் அளித்தார். அதை தொடர்ந்து மண்டல ஆராய்ச்சி நிலையம் சென்று பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பாண்டியன், நெல் சாகுபடியில் பருவத்திற்கு ஏற்ற இரக தேர்வு குறித்தும் மணிலாவில் அதிக மகசூல் பெற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நிலக்கடலை ரிச் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார். முனைவர் அரிசுதன் (உழவியல்) மணிலா எள் மற்றும் உளுந்து சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்கினார். உதவி பேராசிரியர் முனைவர் ஜெயபிரபாவதி (பூச்சியல்) எண்ணெய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றி விளக்கம் அளித்தார். ஆராய்ச்சி நிலையத்தில் மணிலா எள் விதைகள் விவசாயிகளுக்கு பார்வைக்கு வைக்கப்பட்டது. முடிவில் சுற்றுலா வந்த கொட்டியாம்பூண்டி விவசாயி அய்யனார் கண்டுநர் சுற்றுலா எண்ணெய்வித்து பயிர்களில் சாகுபடி முறை குறித்து மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. இந்த சுற்றுலா ஏற்பாடு செய்த விக்கிரவாண்டி, வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் விழுப்புரம், வேளாண்மை இணை இயக்குநருக்கு, விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Spread the love