விடத்தேர் மிக சிறு இலைகளை சிறகமைப்புக் கூட்டிலைகளையும் முள்ளுள்ள சிறு மர பூங்கொத்து. பஞ்சுபோல இரு பகுதிகளாக வெவ்வேறு நிறங்களில் வெண்மை, மஞ்சள், இளம் சிவப்பு காணப்பெறும். கொத்தான கைகள் ஒன்றோடு ஒன்று பின்னி முறுக்கிய வடிவில் இருக்கும். விடத்தலை, விடத்தேர் என்றும் அழைப்பதுண்டு. இதன் வேர் பிசின் மருத்துவ பயன் உடையவை. வேர், சதை, நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பிசின் தாது வெப்பு அகற்றும். விடத்தேர் வறட்பூலா மருது நீர்ப்பூலா ஆகியவற்றின் வேர்பட்டை நெல்லி வற்றல், அதிவிடயம், வில்வப் பிஞ்சு ஆகியவற்றை உலர்த்தி சம அளவு பொடித்து சலித்து 5 கிராம் தயிரில் சாப்பிட வயிற்றுக் கடுப்பு ரத்த கழிச்சல் ஆகியவை தீரும். விடத்தேர் இலை, பூ, காய், பட்டை ஆகியவற்றை சம அளவு நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி காலையில் கொடுத்துவர ரச விட்டால் ஒன்றிய கை, கால் பிடிப்பு தீரும். விடத்தேர் பிசினை உலர்த்தி பொடித்து 3 கிராம் வீதம் பாலில் கற்கண்டு பொடி கலந்து சாப்பிட்டு வர உள் வெப்பம் அகன்று தாது பெருகும், வெள்ளை குணப்படும்.
விடத்தேர்

Spread the love