வேளாண் அதிகாரி ஆலோசனை
தூத்துக்குடி, ஏப்.26
விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்கள் விதைகளை புறத்தூய்மை பரிசோதனை செய்து அவற்றின் சுத்தத்தன்மையை அறிந்துகொள்ளலாம் என வேளாண்மை அலுவலர்கள் தெரிவித்தனர்.
விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உற்பத்தி செய்யும் அல்லது விற்பனை செய்யும் விதைகள் சுத்தத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு சுத்தமானதாக இருந்தால் மட்டுமே விதைப்பின் போது சீராக விதைப்பதற்கும், வேண்டிய அளவு பயிர் எண்ணிக்கை பராமரிப்பதற்கும் எளிதாக அமையும். நெல் சிறுதானியங்கள், பயறு ஆகிய விதைகளுக்கு 98 சதவீதமும், வெண்டை 99 சதவீதமும், கேழ்வரகு, எள் 97 சதவீதமும், நிலக்கடலை, முருங்கை-96 சதவீதமும், கீரை, மல்லி-95 சதவீதமும், புறச்சுத்தம் இருத்தல் அவசியம். தூத்துக்குடி விதைப்பரிசோதனை ஆய்வகத்திற்கு விதைகளை அனுப்பும் போது தூய விதை, பிற தானிய விதை, உயிர்ப்பற்ற பொருள் மற்றும் களை விதை ஆகியவை தனித்தனியே கணக்கிடப்பட்டு புறத்தூய்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே விவசாயிகள் தங்கள் விதைகளின் சுத்தத்தன்மையை அறிந்து சாகுபடிக்கு பயன்படுத்திட வேண்டும் என தூத்துக்குடி விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சேக் நூகு மற்றும் நீனா ஆகியோர் தெரிவித்தனர்.
Spread the love