May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைகளைக் கடினப்படுத்துதல் செயல்முறை

தென்காசி, மார்ச் 11

மானாவாரி சாகுபடியில் பல சமயங்களில் விதை முளைக்கும் தருணத்திலும் அல்லது பயிர் வளரும் பொழுது மழை குறைபாட்டினால் வறட்சி ஏற்படும் நிலை வருகிறது. இம்மாதிரி மானாவாரியில் விதைக்கும் போது விதைகளை கடினப்படுத்தி விதைக்கலாம். விதைகளை இவ்வாறு கடினப்படுத்தி வைப்பதால் விதைகள் வேகமாக முளைத்து ஆரம்பகாலத்தில் வறட்சியை தாங்கி வளர்ந்து அதிக மகசூல் மற்றும் கூடுதல் லாபம் கொடுக்கும்.

செயல்முறை விளக்கம் :

உலர்ந்த விதை à விதைகளை ஈர சாக்கிற்கு இடையில் நிலைப்படுத்துதல் à ஊறவைத்தல் à நிழலில் உலர்த்துதல்àவெயிலில் உலர்த்துதல்

விதை கடினப்படுத்தும் முறை:

துவரை-100 பிபிஎம் துத்தநாக சல்பேட்

உளுந்து- 100 பிபிஎம் துத்தநாக சல்பேட்

பச்சைப்பயறு-100 பிபிஎம் மாங்கனீஸ் சல்பேட்

செய்முறை :

ஒரு லிட்டர் தண்ணீரில் 1000 மில்லி உப்பைக் கரைக்க வேண்டும். இதில் இருந்து 350 மில்லி கரைசலை எடுத்து இதில் ஒரு கிலோ விதைகளை மூன்று மணி நேரம் ஊறவைத்து பின்பு முன்பிருந்த ஈரப்பதம் வரும்வரை விதைகளை உலர்த்த வேண்டும்

விதை கடினப்படுத்துதலின் பயன்கள் :

மானாவாரி பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. எளிமையான கையாளும் முறை. சிறு விவசாயிகளுக்கு ஏற்றது. துரித முளைப்புத்திறன். வேர்கள் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை அதிகரித்தல். சீரான வளர்ச்சி. கடினப்படுத்தி விதையில் இருந்து பெறப்படும் பயிர் நீர் பற்றாக்குறையால் வாடநேர்ந்தால் மீண்டும் நீர் பாய்ச்சுதல் விரைவாக தெளிந்துவிடும். பூக்கும் பருவம் விரைவுபடுத்த படுகிறது. வெப்பம் மற்றும் உவர்ப்புத் தன்மையை தாங்கும் தன்மையை அதிகரிக்கும். மகசூல் அதிகரிக்கும்.

தகவல் : மாணவிகள் ஸ்ரீ லட்சுமி, காயத்ரி, தேன்மொழி, பிரவீனா, பாத்திமா நஸ்ரின், பொன் சினேகா, சௌமியா சிவப்பிரியா, நித்திய பிரியங்கா, மீனாட்சி சிவதிரிஸ்வி, ஆலங்குளம், S.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி, வாசுதேவநல்லூர்.

Spread the love