June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைச்சட்ட விதி மீறலால் 18.33 மெ.டன் விதை நெல் விற்க தடை

தஞ்சாவூர், மே 17

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் அறிவுரைகளுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி இருப்பதால் விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய மு.சுப்பையா, விதைச்சான்று இயக்குநர் கோவை, வழங்கிய உத்தரவின்படி விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் க.விஐயா, தலைமையில் விதை ஆய்வாளர்கள் ரா.ஸ்டீபன் ராஜா சிங், கா.ராஜ், சா.அபர்ணா, ப.பிரியங்கா அடங்கிய குழுவினர் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை பகுதியில் 29 தனியார், 4 அரசு சாரா மற்றும் 2 அரசு விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விதை உரிம விவரங்கள் விதை இருப்பு கொள்முதல் செய்த விதைகளின் விலைப்பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 6 அலுவலக விதை மாதிரிகள் சேகரித்து விதை பரிசோதனை நிலையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் விதைச்சட்ட விதிகளை மீறியது தொடர்பாக ரூ.7.96 இலட்சம் மதிப்புள்ள 18.33 மெ.டன்கள் விதை நெல் மற்றும் இதர விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டது. புதுகோட்டை விதை ஆய்வாளர் ரா.பாலையன் மற்றும் அறந்தாங்கி விதை ஆய்வாளர் முனியய்யா உடன் இருந்தனர்.

Spread the love