மதுரை, ஜூன் 30
மதுரை மாவட்டம், சேடபட்டி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி விதைச்சான்று நடைமுறைகள் குறித்து சேடபட்டி கிராமத்தில் 30.6.22 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் மதுரை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சி.சிங்காரலீனா, விவசாயிகளுக்கு சான்று பெற்ற விதைகளின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினார். சேடபட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், சுமதி, விதைப்பண்ணை அமைத்து கூடுதல் இலாபம் பெறுமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டார். விவசாயிகளுக்கு அரசு வழங்கும் வேளாண் நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர் முனைவர் செல்வராணி, விவசாயிகளுக்கு பல்வேறு விதை உற்பத்தி நுட்பக்கூறுகளை விளக்கினார். மதுரை மாவட்ட விதை சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) முனைவர் க.கண்ணன் மற்றும் சேடபட்டி விதைச்சான்று அலுவலர் க.சௌகத்நூரியா ஆகியோர் விதைப்பண்ணை பதிவு செய்தல், வயலாய்வு செய்தல், விதை சுத்தி செய்தல் மற்றும் விதை சான்று அட்டை பொருத்துதல் வரை அனைத்து தொழில் நுட்பங்களையும் விளக்கினர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் நாகராஜ் மற்றும் அட்மா திட்டப் பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Spread the love