மதுரை, ஜூன் 6
மதுரை மாவட்டம், தே.கல்லுபட்டி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 6.6.22 அன்று சின்னரெட்டிப்பட்டி கிராமத்தில் விதைச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சி.சிங்காரலீனா, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், மதுரை தலைமையேற்று விவசாயிகளிடம் விதைச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். தே.கல்லுபட்டி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், மா.விமலா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகளை உற்பத்தி செய்து கூடுதல் இலாபம் பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். முனைவர் சே.முத்துராமு, உதவிப் பேராசிரியர், வேளாண்மைக்கல்லூரி, மதுரை, தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை பற்றி எடுத்துரைத்தார். தா.வாடிப்பட்டி, விதைச்சான்று அலுவலர், பெ.தெய்வேந்திரன், முனைவர் க.கண்ணன், விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) மற்றும் விதைச்சான்று அலுவலர், து.சந்தீப்சௌத்ரி ஆகியோர் விதைச்சான்று நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர். நிறைவாக வட்டார தொழில்நுட்ப மேலாளர், புஷ்பமாலா நன்றியுரை கூறினார். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Spread the love