October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைப்பண்ணையில் பிற ரக கலப்பினை தவிர்க்க ஆலோசனைகள்

கடலூர், அக்.6

விதைப்பண்ணையில் பிற ரக கலப்பினை தவிர்க்க விதை உற்பத்தியாளர்கள் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து எ.பிரேமலதா, கடலூர் மாவட்ட விதைச்சான்று (ம) அங்ககச்சான்று உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தரமான விதை உற்பத்தியில் கலப்பு பயிர்களை உரிய நேரத்தில் தகுந்த முறையில் நீக்கினால் மட்டுமே விதையின் தரத்தை வயலில் பேணிக் காக்க முடியும். ஆகவே, கலப்பு பயிர்களை விதைப்பண்ணையில் இருந்து அகற்றுவது மிக முக்கியமான ஒன்றாகும்.

விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையங்களிலிருந்து வாங்கி பயன்படுத்துதல் வேண்டும். விவசாயிகள் அதிகளவில் விதைகளை வாங்கும் போது அனைத்து மூட்டைகளும் ஒரே இரகமாக உள்ளனவா என்பதனை கவனித்து வாங்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரகங்கள் வாங்கும் போது அவைகளைத் தனித்தனியே வைத்து பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமாக நாற்று விடுவதற்கு தயார் செய்யும் போது இரகங்கள் கலந்து விடாமல் இருக்கவெவ்வேறுதேதிகள் மற்றும் இடங்களில் நாற்றுவிட்டு, நடவின் போது வெவ்வேறு தினங்களில் நாற்று பரித்து நடுதல் வேண்டும். நடவு முடிந்து மீதமாகும் நாற்றுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், விதைச்சான்று அலுவலர்கள் வயல் ஆய்வின் போது கலவன்கள் இருப்பது குறித்து தெரிவிக்கும் பட்சத்தில், கலவன்களின் அடையாளங்களை விதைச்சான்;று அலுவலர்களிடம் தெரிந்து கொண்டு, கலவன் நீக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இரகங்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்த அடையாளங்களை காண்பித்து, அவர்கள் கலப்பு பயிர்களை உரிய முறையில் நீக்குவதனை உறுதி செய்தல் வேண்டும். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் கலவன் நீக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட கலப்பு பயிர்களை விதைப்பண்ணை அமைவிடத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நன்கு முற்றிய பயிரினை இரகம் வாரியாக தனித்தனியே அறுவடை செய்து அடித்து காய வைத்தல் வேண்டும். முக்கியமாக கதிரடிக்கும் மற்றும் உலர வைக்கும் இடத்தினைமுழுமையாகநன்குசுத்தம் செய்துஅதன்பின்புஅப்பணிகளை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு நன்கு காய வைத்த விதைகளை புதிய சணல் மூட்டைகளில் மட்டுமே சேமித்து, அம்மூட்டைகளின் மேல் இரகத்தின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும். இது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் விதை உற்பத்தியில் கலப்பினை தவிர்த்து நல் விதை உற்பத்தி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Spread the love