நிலத்தேர்வு : வளமான வடிகால் வசதியுடன் நிலம் இருத்தல் வேண்டும். மேலும் தற்பொழுது பயிரிடப்படும் பயிரின் வேறு இரகங்கள் முந்தைய பருவத்தில் பயிர் செய்திருக்க கூடாது.
விதைத்தேர்வு : ஒரு குறிப்பிட்ட நிலை விதைகளை உற்பத்தி செய்யும் போது அதிகாரப் பூர்வமான விதைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும்.
பயிர் விலகு தூரம் : அதே இரகம் மற்றும் பிற இரகங்களிடமிருந்து வயலின் நான்கு பக்கங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட பயிர் விலகு தூர இடைவெளி இருத்தல் வேண்டும்.
கலவன் அகற்றுதல் : விதைக்காகப் பயிரிடப்படும் குறிப்பிட்ட இரகச்செடிகளின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட செடிகள் மற்றும் பூச்சி, நோய் தாக்கிய செடிகளை அவ்வப்போது கண்டறிந்து நீக்கிவிட வேண்டும்.
வயல் ஆய்வு : பூப்பதற்கு முன்பும், பூக்கும் மற்றும் அறுவடைக்கு முன்புள்ள தருணங்களில் கலவகன்களை அகற்றி வயல் தரத்தினை பராமரித்திட வேண்டும். விதைச்சான்று துறையினரால் ஆய்வு செய்திடும் போது வயல் தரத்தினை பராமரித்திட சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்திட வேண்டும்.
அறுவடை : விதைப்பயிரானது வினையியில் முதிர்ச்சி அடைந்நதவுடன் அறுவடை செய்யப்பட வேண்டும். விதைகளை அறுவடை செய்த உடன் காலை 10.00 முதல் மதியம் 12.00 மணி வரையிலும், பிறகு மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் காயவைத்து தேவைப்படும் ஈரப்பதத்தில் புதிய கோணிப்பைகளில் நிரப்பி விதைச்சான்று அலுவலரிடம் சுத்தி அறிக்கை பெற்று சுத்தி நிலையத்திற்கு அனுப்பிட வேண்டும்.