June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைப்பரிசோதனை கட்டணம் உயர்வு

திருச்சி, மார்ச் 31

திருச்சி விதைப்பரிசோதனை அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் விதைப்பரிசோதனை கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறினார். திருச்சி காஜாமலை பகுதியில் விதைப்பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படை இடுபொருளாகும். விதையின் தரத்தை அறிய விதைப்பரிசோதனை செய்யப்படுகிறது. திருச்சி விதைப்பரிசோதனை நிலையத்தில் விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிற ரக கலப்பு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இவ்விதைப்பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதை விற்பனையாளர்களிடம் இருந்து பெறப்படும் விதை மாதிரிகளை ஆய்வு செய்ய ஒரு விதை மாதிரிக்கான விதைப்பரிசோதனை கட்டணம் ஏப்ரல்-2022 1ஆம் தேதி முதல் ரூ.80/- (ரூபாய் எண்பது) ஆக உயர்ந்துள்ளது. ஓவ்வொரு விவசாயியும் சாகுபடி செய்ய வாங்கும் விதைகளையோ அல்லது தங்கள் கைவசம் உள்ள விதைகளையோ விதைப்பதற்கு முன் விதையின் தரம் அறிய திருச்சி மாவட்டத்தில் அரசு பல்துறை வணிக வளாக கட்டிடத்தின் பின்புறம், காஜாமலை, திருச்சி-20 என்ற முகவரியில் அமைந்துள்ள விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி பகுப்பாய்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Spread the love