June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைப்பரிசோதனை நிலையத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு

தஞ்சாவூர், ஜூன் 17

சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், மு.சுப்பையா, 17.06.2022 அன்று விதைப்பரிசோதனை நிலையத்தின் பணிகளை ஆய்வு செய்தார்.

விதைப்பரிசோதனை நிலையத்தில் பெறப்படும் விதை மாதிரிகளின் தரத்தை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிறரக கலப்பு ஆகியன கணக்கிடப்படும் முறைகளையும் மற்றும் அவற்றிற்கான ஆய்வக உபகரணங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார். சான்று விதை மாதிரிகள், ஆய்வக விதை மாதிரிகள் மற்றும் பணிவிதை மாதிரிகள் முறையாக பெறப்பட்டு, குறித்த நேரத்தில் பகுப்பாய்வு முடிவுகளை வழங்குவது குறித்து ஆய்வு செய்தார்.

விதைமுளைப்புத்திறன் அறையில் வைக்கப்பட்டிருக்கும் விதை மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விதை மாதிரிகள் காப்பு அறையை பார்வையிட்டு, சேமிப்பு விதைகளை தரத்துடன் பாதுகாத்திட உரிய அறிவுரை வழங்கினார். தரமான விதைகளே விவசாயத்தின் முக்கிய இடுபொருள், அத்தகைய தரமான விதைகளை விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் வழங்குவதே விதைப்பரிசேதனை நிலையத்தின் முக்கிய பங்கு என்பதையும் அத்தகைய பங்கினை சிறப்பாக செயலாற்றிடவும், மேலும் 2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்கினை வெற்றிகரமாக சாதனை அடையவும் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குநர், கோ.வித்யா, விதைச்சான்று உதவி இயக்குநர் அ.முகம்மது பாரூக், NFSM ஆலோசகர் இளஞ்செழியன் மற்றும் வேளாண் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Spread the love