திருநெல்வேலி, மார்ச் 15
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களில் நல்விதை மிக முக்கியமானதாகும். நல்விதை என்பது அதிக முளைப்புதிறன், அதிக சுத்தம், குறைந்த ஈரத்தன்மை மற்றும் கலவன் இல்லாமல் இருத்தல் வேண்டும். வேளாண்மை துறையினரால் ஒவ்வொரு பயிருக்கும் சாகுபடி பரப்பில் தகுந்தவாறு சான்று பெற்ற விதைகள் விவசரியகளுக்கு வழங்கப்படுகிறது. அரசு மூலம் விநியோகம் செய்யப்படும் அனைத்து விதைகளும் சான்று பெற்ற விதைகளாகும். திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தில் 3 வகையான மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்படுகின்றன.
சான்று விதை மாதிரி – விதைச் சான்றளிப்பு பிரிவில் பதிவு செய்து, விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் விதைச்சான்று உதவி இயக்குநர் மூலம் வரப்பெறுவது.
ஆய்வாளர் விதை மாதிரி – அரசு, தனியார் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகள் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்து மாதிரி எடுக்கப்பட்டு நேரிடையாக வரப்பெறுகிறது.
பணி விதை மாதிரிகள் – விவசாயிகள், உற்பத்தியாளர்கள் தாங்களாகவே தங்களது விதையின் திறனை அறிந்து கொள்ள தங்கள் விதைகளை நேரடியாக பரிசோதனைக்கு அனுப்புவதாகும்.