June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதையின் ஈரப்பதம் அறிந்து பயிர் செய்வீர்

திருநெல்வேலி, மே 21

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் மற்றும் இருப்பிலுள்ள விதைகளில் சரியான ஈரப்பதம் உள்ளதா என்றும் பரிசோதனை செய்த பின்பே விதைகளை சேமிக்க வேண்டும். விதைக்காக பயன்படுத்தும் தானியத்தை காலை மற்றும் மாலை இளம் வெயிலில் காயவைத்து வெப்பம் தணிந்த பின் சேமிக்க வேண்டும். இவ்வாறு சேமிக்கும் நெல்லுக்கு அதிகபட்சம் 13 சதம், சிறுதானியங்களுக்கு 12 சதம், பருத்தி விதைக்கு 10 சதம், பயறுவகை, சூரியகாந்தி, நிலக்கடலை போன்றவற்றிற்கு 9 சதம் என்ற கணக்கில் ஈரப்பதம் இருத்தல் அவசியம். இவ்வாறு சேமிப்பதால் விதைகளின் முளைப்புத்திறன் பாதுகாக்கப்படுவதுடன், பூச்சி, நோய் தாக்குதலும் குறைகிறது. எனவே விவசாயிகள் தங்களிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதையினை திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்திற்கு ஈரப்பத பரிசோதனைக்கு அனுப்பி சரியான நீர் நயப்புடன் சேமித்து பயன்பெற திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா கேட்டுக் கொண்டார்.

Spread the love