June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதையின் ஈரப்பதம் அறிந்து விதைகளை சேமிக்கலாம்

“வித்தே விளைவின் ஆதாரம்” வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் விதைகளின் பங்கு இன்றியமையாதது. விதையின் ஈரப்பதம் என்பது விதை சேமித்துள்ள நீரின் அளவாகும். தரமான விதை, விளைச்சலில் 15% உயர வழி வகுக்கிறது. தமிழகத்தில் விதைக்கான உற்பத்தி ஆண்டு முழுவதும் நடைபெறுவதில்லை. எனவே, அறுவடைக் காலத்தில் விதைகளை தகுந்த முறையில் சுத்திகரிப்பு செய்து சேமித்து வைக்க வேண்டும். விதையின் ஈரப்பதமானது சதவீதத்தில் குறிப்பிடப்படுகிறது. விதையின் ஈரப்பதமானது அதன் முளைப்புத்திறன், பூச்சித்தாக்குதல், நோய் தாக்குதல், விதை அழுகுதல் மற்றும் அவ்விதையின் அதிகபட்ச சேமிப்புக் காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்கிறது. விதையின் ஈரப்பதம் மிக அதிகமாக இருப்பதாலும், மிககுறைவாக இருப்பதாலும் விதையின் முளைப்புத்திறன் சேமிப்புக் காலஅளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற பாதிப்புகளை உருவாக்குகிறது. எனவே, விதையின் ஈரப்பதத்தை இந்திய குறைந்தபட்ச விதை அளவீடு பரிந்துரைக்கப்பட்ட (ஐனெயைn ஆiniஅரஅ ளுவயனெயசன கழச ளுநநனள) அளவில் சேமித்து வைக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் அதிகரிப்பதாலோ, குறைவதாலோ விதைத்தரத்தை முடிவு செய்யும் முக்கிய காரணியான விதை முளைப்புத்திறன் குறையும்.

அறுவடை நேரத்திலிருந்து நடவு செய்யும் நேரம் வரை விதையின் ஈரப்பதம் மாறுபடும். எந்த ஒரு நிலையிலும் குறிப்பிட்ட கால அளவுகளுக்கு மேல் அது உயர்ந்தால் விதைக்குள் உடலியல் செயல்முறைகள் விரும்பதகாத தூண்டுதலின் விளைவாக விதை பலவீனமடைந்து முளைக்கும் திறனை இழக்கும் அபாயம் உள்ளது. ஈரப்பதம் அதிகம் இருப்பின், விதையானது, பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம். விதை சேமிப்பின் மிகப்பெரிய சவாலாக கருதப்படுபவை புழுக்கள் மற்றும் பூச்சிகளாகும். இவற்றால் விளைச்சலில் 2.5% இழப்பு ஏற்படுகிறது. பூச்சிகளும், பூஞ்சாணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இந்தப் பூச்சிகள் விதைகளை துளைத்து உண்டு சேதப்படுத்துவதுடன் அவற்றின் கழிவுகளை விதைக் குவியலில் சேர்த்து அந்த விதை குவியல் முழுவதையும் சேதப்படுத்தி விதைக் குவியலின் ஈரப்பதத்தினை அதிகமாக்கி அதனை பூஞ்சாணத் தாக்குதலுக்கு ஆளாக்கி விதைகளிலிருந்து துர்நாற்றம் வீச செய்கிறது. இதனால் விதையின் முளைப்புத்திறன் வீரியம் குறைந்து விதைப்பதற்கு தகுதியற்றவை ஆகிறது.

டிஜிட்டல் ஈரப்பதமானி

விதைகளை சேமிக்கும் முறைகள்:
→விதை சேமிப்புக் கிடங்கினை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
→விதை மூட்டைகளைத ரையில் அடுக்காமல் டன்னேஜ் கட்டைகள் மீது அடுக்க வேண்டும். மூட்டைகளை சுவரை ஒட்டி வைக்காமல் நல்ல காற்றோட்ட இடைவெளியுடன் அடுக்கி வைக்க வேண்டும்.
→புதிய சாக்குப்பைகள் சேமிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
→0.1% மாலத்தியான் கரைசலை தானியங்கள் மேல் படாமல் தெளித்து பூச்சி தாக்குதலை தடுக்க வேண்டும் (அல்லது) அலுமினியம் பாஸ்பைடு மாத்திரை 3 ழேள.ஃ டன் என்றளவில் வைத்து 3 நாட்களுக்கு நச்சுப் புகையிட்டு வைப்பதானல் பூச்சிகளை அழிக்கலாம்.
→விதைகளை சேமிக்கும் முன் உடைந்த விதைகள், குப்பைகள், தூசிகள் போன்றவற்றை அகற்ற வேண்டும்.
→விதைகள் சேமிக்கும் முன் 3 நாட்களுக்கு சூரிய ஒளியில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை உலர்த்த வேண்டும்.
விதைகள் அதிக முளைப்புத்திறனுடன் இருக்கவும், உரிய காலம் வரை சேமிக்கவும் நெல்-13% சோயா பீன்ஸ், சிறுதானியங்கள் பப்பாளி-12% பயறு வகைகள் நிலக்கடலை, சூரியகாந்தி, எள், கொத்தவரை, பீட்ரூட், பாலக்கீரை-9% முருங்கை, புளிச்சை, வெங்காயம், கத்திரி, மிளகாய், தக்காளி-8% மற்றும் காலிப்பிளவர், முட்டைக்கோஸ், நூல்கோல், சுரை, பாகல், புடல், பீர்க்கு, பூசணி, பரங்கி, தர்பூசணி, வெள்ளரி -7%, பரிந்துரைக்கப்பட்ட ஈரப்பத அளவுகள் இருக்குமாறு சேமித்து விவசாயிகள் பயன் பெறலாம்.

எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் குறுவையில் அதிக மகசூல் பெற்று இலாபம் அதிக லாபம் பெறவும் விதை இடுபொருள் செலவினைக் குறைக்கவும், தங்களிடம் உள்ள விதைகளை விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80/- ஆய்வுக் கட்டணமாக செலுத்தி, கரூர் காந்தி கிராமம், திண்ணப்பாநகர் முதல் தெருவிலுள்ள விதைப் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து விதையின் தரம் அறிந்து விதைக்கவும், அறுவடை செய்த விதையினை அடுத்த விதைப்புக்கு சேமிக்கும் பட்சத்தில் உரியமுறையில் சேதமில்லாமல் அறுவடை செய்து, விதையின் ஈரப்பதம் அறிந்து கொண்டு, விதைகள் பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் சேமிக்குமாறு கரூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சி.பத்மா மற்றும் வேளாண் அலுவலர் அ.அபர்ணா ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

Spread the love