June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதை கடினமாக்குதல் செயல் விளக்கம்

நாமக்கல், மார்ச் 30

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டாரம் 29.3.22 அன்று கோனேரிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சி முகாமில் பி.ஜி.பி வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் விதை கடினமாக்குதல் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விதை கடினமாக்குதல் மூலம் முளைப்புத்திறன் மற்றும் வீரியம் அதிகரிக்கும். இச்செயல்முறை பெரும்பாலும் பயறு வகைகளுக்குப் பயன்படுத்தலாம். இதில் மகசூல் அதிகம் ஈட்டலாம் என விளக்கமளிக்கப்பட்டது.

Spread the love