May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதை சான்று மற்றும் அங்கக சான்று தொடர்பாக கிராமப்புற இளைஞர் களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை, மே 10

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் கிராமப்புற இளைஞர்களுக்காக விதை மற்றும் அங்ககசான்று தொடர்பான பயிற்சி நடைபெறுகிறது. பல்வேறு வட்டாரங்களை சேர்ந்த 15 விவசாயிகள் கலந்து கொண்டனர். அங்கக வேளாண்மை, அங்கக சான்று தொடர்பாக விதைசான்று உதவி இயக்குநர் மதுரைசாமியும், அங்கக விதை உற்பத்தி தொடர்பாக விதைசான்று அலுவலர் யோகேஷ்வரனும் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். அங்கக சான்று பெறுவதற்கு தொடர்ந்து மூன்று வருடங்கள நிலத்தினை இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் தெளிக்காமல் பராமரிக்க வேண்டும்.

செயற்கை உரங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை இடுபொருட்களான தொழு உரம், மண்புழு உரம், பஞ்ச காவ்யா, அமுதகரைசல், தேமோர் கரைசல், ஜீவாமிர்தம், மீன் கரைசல் அகியவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் பூச்சி மருந்து தெளிப்பதற்கு பதிலாக இலை கரைசல், உயிரியல் காரணிகள், உயிர் உரங்கள் பல்லுயிர் பெருக்கம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. இயற்கை முறையில் தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களும் தெரிவிக்கப்பட்டது. நாட்டு காய்கறி ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் விபரம் கூறப்பட்டது.

ஆர்வமுள்ள விவசாயிகள் குழுவாகவோ, தனியாகவோ தங்களின் நில ஆவணங்கள், ஆதார், பான் கார்டு, மண் மற்றும் தண்ணீர் மாதிரி முடிவுகளுடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் மதுரைசாமி கேட்டுக்கொணடார்.

Spread the love