August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதை நெல் பரிசோதனை அவசியம்

வேளாண்மைத்துறை அதிகாரி ஆலோசனை

விதைகளை குறிப்பிட்ட ஈரப்பதம் இருக்கும் வகையில் சேமிக்க வேண்டும். இதற்காக பரிசோதனை செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் S.A.சேக் நூகு, நோ.நீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாது : விதைச் சேமிப்பு என்பது விதை அறுவடை செய்த காலம் முதல் நடவு செய்யும் காலம் வரை அதிகபட்ச முளைப்புத் திறன் மற்றும் வீரியம் ஆகியவற்றை பராமரித்தலே ஆகும். ஆரோக்கியமான மற்றும் வீரியமுள்ள நாற்றுக்கள் முளைப்பதுடன் அவற்றின் எண்ணிக்கையும் போதுமான அளவு இருக்க வேண்டும். விதையின் ஈரப்பதம,; இழப்பைத் தாங்கிக் கொள்ளும் தன்மையை கொடுத்து விதையின் வீரியத்தை உலர்ந்த நிலையில் பராமரிக்க உதவுகிறது.

எனவே விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள விதைகளை சரியான ஈரப்பதம் இருக்கும் வகையில் சேமிக்க வேண்டும். தற்போது நமது பகுதியில் நெல் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. இதனால் விதைக்காக பயன்படுத்தும் தானியங்களை காலை மற்றும் மாலை இளம் வெயிலில் காய வைத்து வெப்பம் தணிந் பிறகு சேமிக்க வேண்டும். இப்படி சேமிக்கும் நெல்லுக்கு அதிக பட்சம் 13 சதவீதமும், சிறுதானியங்களுக்கு 12 சதவீதமும், பருத்தி விதைக்கு 10 சதவீதமும், பயறு வகை, சூரியகாந்தி, நிலக்கடலைக்கு 9 சதவீதமும் ஈரப்பதம் இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட அளவு விதைகளில் ஈரப்பதம் இருக்கும் வகையில் சேமிப்பது மிக அவசியம். இந்த முறையில் சேமித்தால் விதைகளின் முளைப்பு திறன் பாதுகாக்கப்படும். பூச்சி, நோய் தாக்குதலும் குறையும். விவசாயிகள் தங்களிடம் இருப்பு வைத்துள்ள விதைகளை தூத்துக்குடி விதைப்பரிசோதனை நிலையத்தில் ஈரப்பத பரிசோதனை செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Spread the love