June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதை பண்ணை விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்து உள்ளதால் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் இரகத்தினை பிறரகத்துடன் கலக்காத வண்ணம் அறுவடை செய்வது மிகவும் இன்றியமையாதது. அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்பதின் மூலம் மேற்படி விதைகளின் தரத்தினை கெடாமல் பாதுகாக்கலாம்.

  1. பயிர் அறுவடை செய்யும் இயந்திரத்தினை நன்கு சுத்தம் செய்து பின்னரே பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்த பிறரக நெல் மணிகள் ஏதெனும் இயந்திரத்தில் இருக்கக்கூடாது.
  2. முதலில் அறுவடை செய்யப்படும் விதைகளை விதைக்கு அல்லாத உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
  3. அறுவடை செய்த விதைகளை புதிய கோணிப்பைகளிலேயே பிடித்து கொள்ள வேண்டும்.
  4. அறுவடை செய்த விதைக் குவியல்களை நன்கு சுத்தம் செய்த களங்களில் உலர வைக்க வேண்டும். உலர வைக்கும் போது காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள்ளும், பிற்பகல் 3 மணிக்கு மேல் 5 மணிக்குள் மட்டுமே உலர வைக்க வேண்டும்.
  5. விதைகளின் ஈரப்பதத்தை படிப்படியாக குறைத்து நெல் விதைகளின் ஈரப்பதம் 12 முதல் 13 சதம் வரும் வரை உலர வைக்க வேண்டும். சரியாக காய்ச்சல் வந்ததை அறிய ஒரு நெல்லை கடித்து பார்க்கும் போது அது இரண்டு துண்டாக பிளவுபட வேண்டும்.
  6. நன்கு உலர்ந்த விதைகளை புதிய கோணிப்பைகளில் பிடித்து விதைகளின் இரகம் குறித்து எழுத வேண்டும்.
  7. ஒன்றுக்கு மேற்பட்ட இரகங்கள் சாகுபடி செய்து இருந்தால் ஒவ்வொரு இரகத்தினையும் தனித்தனி மூட்டைகளாக பிரித்து ஒரு இரகத்துடன் ஒன்று கலக்காதவாறு சேமித்து
    வைக்க வேண்டும். இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் விதைக்குவியல்கள் தரமானதாகவும், எளிதல் தேர்ச்சி பெறும் விதைகளாக இருக்கும் என திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஞா.ஆனந்தி ராதிகா தெரிவித்தார்.

Spread the love