May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதை பரிசோதனையின் அவசியம்

விதைப்பரிசோதனை அலுவலர் அறிவிப்பு

திருநெல்வேலி, மே 5

திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முளைப்புத்திறன் கண்டறிந்து இணையதளம் மூலம் ஆய்வு முடிவு வழங்கப்பட்டுவருகிறது. முளைப்புத்திறன் பரிசோதனைக்கு முளைப்புத்தாள், பில்ட்டர் பேப்பர் போன்ற தளங்களில், வேக்யூம் கவுன்டர் மூலம் விதைகள் எண்ணப்பட்டு விதைப்பு மேற்கொள்ளப்படும். முளைப்பு திறன் பரிசோதனை அறையில், ஏர்கண்டிசனர் மூலம் தட்பவெப்பம் 25°ஊஇ வெளிச்சம் 750 வடி 1250 லக்ஸ் மற்றும் ஈரப்பதம் 90 சதவீதம் என்ற அளவில் பராமரிக்கப்பட்டு முளப்புத்திறன் கண்காணிக்கப்படுகிறது. நெல் விதைகள் 14 நாட்களும், மக்காசோளம் மற்றும் உளுந்து 7 நாட்களும், பாசிப்பயறு 8 நாட்களும். பருத்தி 12 நாட்களும் பராமரிக்கப்பட்டு முளைப்புத்திறன் கணக்கிடப்படுகிறது.

முளைப்புத்திறன் கணக்கீட்டின் போது செடியின் வேர், இலை போன்றவற்றின் வளர்ச்சி அடிப்படையில் இயல்பான நாற்றுக்கள், இயல்பற்ற நாற்றுக்கள், கடின விதை மற்றும் உயிரற்ற விதைகள் கணக்கீடு செய்யப்படுகிறது. இயல்பான நாற்றுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விதையின் முளைப்புத்திறன் சதவீதம் கணக்கிடப்படுகிறது. பயறு வகை பயிர்களில் இயல்பான நாற்றுக்களுடன் கடின விதைகளும் சேர்த்து முளைப்புத்திறன் சதவீதம் கணக்கிடப்பட்டு முடிவுகள் இணையதள மூலம் அறிவிக்கப்படும். குறைந்தபட்ச முளைப்புத்திறன் சதவீதம் நெல், பயிருக்கு 80 சதவீதமும், பயறுவகை பயிர்களுக்கு 75 சதவீதமும், மக்காச்சோளம் 90 சதவீதமும், பருத்தி (இரகம்) 65 சதவீதமும், பருத்தி (வீரியம் ஒட்டு) 75 சதவீதமும் இருத்தல் அவசியம்.

எனவே, விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்கென வைத்திருக்கும் விதைகளை திருநெல்வேலி விதைபரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி ஒரு மாதிரிக்கு ரூ.80/- கட்டணம் செலுத்தி முளைப்புத்திறன் அறிந்து பயன்படுத்திட திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஞா,ஆனந்தி ராதிகா கேட்டுக் கொண்டார்.

Spread the love