May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதை பரிசோதனை செய்து கொள்ள
விதைப்பரிசேதனை அலுவலர் அழைப்பு

திருநெல்வேலி, மார்ச் 8

திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தில் நெல், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சீனி அவரை, எள், பருத்தி, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பரிசோதனைக்கு பெறப்படுகின்றது. இவற்றை மணல், முளைப்புத்தாள், வடிதாள் போன்ற வெவ்வேறு முளைப்புத் தளங்களில் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு மாதிரிக்கும் டிவைடர் மூலம் பரிசோதனைக்கான மாதிரிகள் பிரிக்கப்பட்டு விதைப்புப்பணி மேற்கொள்ளப்படுகிறது. வேக்யூம் சீட் கவுண்டர், சீட் பிளேசிங் போர்டு, இம்பரசன்போடு உள்ளிட்ட கருவிகள் மூலம் விதை எண்ணி விதைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

மடிப்புத்தாள் முறையில் பயறுவகைகளும், சுருள்தாள் முறையில் நெல் பயிரும், பெட்ரிடிஉக்ஷ்டூல் தக்காளி, மிளகாய் விதைகளும் விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது. முளைப்புத்திறன் கணக்கீட்டின் போது இயல்பான நாற்று, இயல்பற்ற நாற்று, கடினவிதை ஆகியவற்றை தனித்தனியே கணக்கிடப்படுகிறது. புறத்தூய்மை பரிசோதனையில் தூயவிதை, பிறதானிய விதை, உயிர்ப்பற்ற பொருள், களை விதை ஆகியவற்றை புயூரிட்டி ஒர்க் போர்டு மூலம் பிரித்தெடுத்து, அதன் எடையின் சதவீதத்தினை கணக்கிட்டு ஆய்வு முடிவுகள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் வைத்துள்ள விதைகளை திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து பயன்பெறுமாறு திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஜா,ரெனால்டா ரமணி கேட்டுக் கொண்டார்.

Spread the love