June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விராலி

விராலி காம்புள்ள மற்ற மேல் நோக்கிய இலைகளையும், சிறகுள்ள விதைகளையும், கசப்பான பட்டையும், கொண்ட குறுஞ்செடி. இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. காய்ச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய மருத்துவ குணமுடையது. 20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊற வைத்து வடிகட்டி அதில் 20 மில்லி பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி ஆகியவை தீரும். இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக வைத்துக்கட்டி வரக் கட்டி, அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் வீக்கம் குறையும். விராலிப்பட்டி உலர்த்தி பொடித்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டு வர, சளி, சளிக் காய்ச்சல், முறை காய்ச்சல், மலேரியா முதலிய நோய்கள் தீரும். பட்டையை அரைத்து பற்றிட வீக்கங்கள் விரைவில் கரையும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423.11505.

Spread the love