October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விருதுநகர் மாவட்டத்தில் உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

விருதுநகர், அக்.9

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் வேளாண் அதிகாரிகள் 08.10.21 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதிமுறைகளை மீறிய 8 விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், விவசாயிகளுக்கு தரமான உரம் தங்குதடையின்றி கிடைத்திடும் பொருட்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் உரம் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர்கள், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு), வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, விலை விபரப் பட்டியல் இல்லாதது, பிஒஎஸ் கருவி இருப்பு மற்றும் உண்மை இருப்பிற்கு முரணாக இருந்தது, அனுமதியின்றி இருந்த உரம் ஆகிய விதிமீறல்களுக்காக 1 உரக்கடைக்கு தற்காலிக உர உரிமம் இரத்து, 4 உரக்கடைகளுக்கு விற்பனை தடையும், 3 உரக்கடைகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டது என விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் தெரிவித்தார்.

Spread the love