September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விருதுநகர் மாவட்டம் ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியல்களை ஆட்சியர் வெளியிட்டார்

விருதுநகர், செப்.14

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குச்சாவடிகளை மறுஆய்வு செய்து வரைவு பட்டியலை 13.09.2021 திங்கள்கிழமையன்று வெளியிடுமாறு தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் படி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் (1500 வாக்காளர்கள் வீதம்) வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன் சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love