July 7, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விற்பனையில் 2021 டிரைபர் மாடல் 75 ஆயிரம் யூனிட்களை கடந்தது

புது தில்லி, ஏப்.20

2021 டிரைபர் மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாவது:

ரெனால்ட் நிறுவனத்தின் 2021 டிரைபர் மாடல் விற்பனையில் 75 ஆயிரம் யூனிட்கள் கடந்துள்ளது. இந்தியாவில் புதிய டிரைபர் மாடல் ஆகஸ்ட் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் சந்தையில் 4.79 சத பங்குகளை பெற்று இருக்கிறது.

மேலும், 2021 டிரைபர் மாடல் புது அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் மேம்பட்ட மாடல் விலை ரூ.10 ஆயிரத்தில் துவங்கி ரூ.15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. புதிய டிரைபர் மாடல் டூயல்-டோன் வண்ணத்திலும்கிடைக்கிறது. எனினும், இது டாப் எண்ட் RXZ வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

புதிய ரெனால்ட் டிரைபர் மாடல் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 71 பியஹச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மி­ன், ஏஎம்டி ஆப்­ன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு அதிகபட்சம் 19 கிலோமீட்டர் வரை செல்லும்.

Spread the love