August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விலையில்லாததால் வீணாகும் வெள்ளரி

கோவை, மே 7

வெள்ளரி காய் மற்றும் பழத்துக்கு விலை கிடைக்காததால், விவசாயிகள், பழங்களை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டாரம், காரமடை மேற்கு பகுதிகளில், பெரும்பாலான விவசாயிகள், வெயில் காலத்திற்கு ஏற்ப, காய்கறி மற்றும் பழங்களை பயிர் செய்து வருகின்றனர். அவ்வகையில் அரசப்பனூர், காளியப்பனூர் மற்றும் மருதூர் ஊராட்சிகளில், பல்வேறு கிராமங்களில் சாம்பார் வெள்ளரி பயிர் செய்துள்ளனர். தற்போது, வெள்ளரி காய் மற்றும் பழத்துக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர்.

Spread the love