விளாம்பழம் மணம் உள்ள சிறகுக் கூட்டிலைகளையும், ஓடு உள்ள சதைக் கணியும் உடைய முள்ளுள்ள உறுதியான பெரிய மரம். கருவிளம் என்றும் அழைக்கப்பெறும். கொழுந்து, இலை, காய், பழம், வேர் பிசின் மருத்துவ குணமுடையவை. சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது, விழாவின் பொதுவான குணமாகும். பழம், கோழையகற்றும். தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும். பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் விழுந்து புன்னைக்காய் அளவு அரைத்து பால், கற்கண்டு கலந்து சாப்பிட பசியின்மை, கப இருமல், காசம் இரைப்பு தீரும். இலைக் குடிநீர் பித்த சுரம் இருமல் தேக வறட்சி தணிக்கும். விளாங்காய் சதையை சிறிது வேக விட்டு கொடுக்க பேதி, சீத பேதி தீரும். பல ஓட்டுடன் அரைத்து விழுங்க மருந்து வீறு தணியும். விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை நீர், எரிச்சல், மேக நோய், உள் உறுப்பு ஆகியவை தீரும். அவசியம் இலை பூ பழம் பட்டை வேர் ஆகியவற்றை சம அளவு உலர்த்தி பொடித்து வேளைக்கு 5 கிராம் சிறிது சர்க்கரையுடன் உண்டுவர பித்தம் மிகுதி பசியின்மை, பேதி, சீதபேதி, உமிழ்நீர் சுரத்தல் ஆகியவை தீரும்.
விளாம்பழம்

Spread the love