August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விளைச்சலை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்

வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் தகவல்

சிவகங்கை, ஜூன் 30

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.என்.செந்தில்நாதன், விளைச்சலை அதிகரிக்க தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விரிவான முறையில் எடுத்துக்கூறினார்.

TNAU – PULSES WONDER

பயறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்
பயன்கள் :
§ பூக்கள் உதிர்வது குறையும்
§ பயறு விளைச்சல் 20 சதம் கூடும்
§ வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை :
§ அளவு : ஏக்கருக்கு 2 கிலோ
§ தெளிப்பு திரவம் : 200 லிட்டர்
§ தெளிக்கும் பருவம்: பு+க்கும் பருவம்
§ தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்.

TNAU – GROUNDNUTRICH

நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்
பயன்கள்:
§ அதிக பு+ பிடிக்கும் திறன்
§ குறைந்த பொக்கு கடலைகள்
§ விளைச்சல் 15 சதம் வரை கூடும்
§ வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை :
§ அளவு : ஏக்கருக்கு 2 கிலோ
§ தெளிப்பு திரவம் : 200 லிட்டர்
§ தெளிக்கும் பருவம்: பு+க்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம்
§ தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

TNAU – COCONUT TONIC

தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக்
பயன்கள்:
§ பச்சையம் அதிகரிக்கும்
§ ஒளிச்சேர்க்கை திறன் கூடும்
§ பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
§ குரும்பை கொட்டுதல் குறையும்
§ காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும்
§ விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும்
§ பு+ச்சி நோய் எதிர்பபு சக்தி கூடும்

பயன்படுத்தும் முறை : ஒரு வருடத்திற்க்கு இரண்டு பாக்கெட் (200 மி.லி) டானிக்கை 6 மாத இடைவெளியில்
வேர் மூலம் கொடுக்க வேண்டும்

TNAU – SUGARCANE BOOSTER

கரும்பிற்க்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்
பயன்கள்:
§ இடைக்கணுக்களின் நீளம் கூடும்
§ கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும்
§ விளைச்சல் 20 சதம் வரை கூடும்
§ சர்க்கரை கட்டுமானம் கூடும்
§ வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை :
§ அளவு : ஏக்கருக்கு 1, 1.5 மற்றும் 2 கிலோ முறையே
§ தெளிப்பு திரவம் : 200 லிட்டர்
§ கரும்பு நட்ட 45, 60 மற்றும் 75 வது நாட்களில்
§ தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

பருத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்:
பயன்கள்:
§ பூ முறு;றும் சப்பைகள் உதிர்வது குறையும்
§ காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழி வகுக்கிறது
§ விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கும்
§ வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை :
§ அளவு : ஏக்கருக்கு 2.5 கிலோ
§ தெளிப்பு திரவம் : 200 லிட்டர்
§ தெளிக்கும் பருவம்: பு+க்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம்
§ தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

TNAU – MAIZE MAXIM

மக்காச்சோளத்திறக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பு+ஸ்டர்:
பயன்கள்:
§ மணி பிடிக்கும் தறன் அதிகரிக்கும்
§ விளைச்சல் 20 சதம் கூடும்
§ வறட்சியை தாங்கும் திறன் அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை :
§ அளவு : ஏக்கருக்கு 3 கிலோ
§ தெளிப்பு திரவம் : 200 லிட்டர்
§ தெளிக்கும் பருவம்: ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவம்

§ தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

Spread the love