May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் மா விவசாயிகள் கவலை

SONY DSC

விருதுநகர், ஏப்.29

நடப்பாண்டு சீசனில் மா மரங்களில் அதிகமாக பூக்கள் பூத்தது. ஆனால் டிசம்பர் மற்றும் ஜனவரியில் பெய்த மழையால், பூக்கள் உதிரும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் அடுத்தடுத்து பெய்த மழை காரணமாக மீண்டும் மாமரங்கள் பூத்தது. இதனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாங்காய்க்கு மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாகும். மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் மாமரங்கள் ஏராளமாக உள்ளன. செம்மண் பூமியில் விளைந்த மாங்காய் ருசியாக இருக்கும் என்பதால் ராஜபாளையம் மாங்காய்க்கு நல்ல வரவேற்புள்ளது. இந்த பகுதியில் விளையும் நெல்லூர் சப்பட்டை எனும் இமாம்சா ரகம் அதிக ருசி உள்ளது. இதன் விலை கிலோ ரூ.30 முதல் 35 வரை விற்பனையாகிறது.

2ம் ரக மாங்காய்களான கிளிமூக்கு, ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட பஞ்சவர்ணம், நீலம், காசாலட்டு போன்ற மா வகைகள் ரூ.30 முதல் 50 வரை விற்பனை ஆகிறது. நெல்லூர் சப்பட்டை விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டைவிட தற்போது மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் சரிந்துள்ளது.

மாமரங்களில் பூ பூப்பது முதல் பிஞ்சு விடுவது வரை தொடர்ச்சியாக மருந்து அடித்து நோயில் இருந்து காப்பது முதல், மாங்காய் இறக்குவதற்கு ஒரு நபருக்கு ஒருநாள் கூலி ரூ.8 வரை செலவாகிறது. இதனை அடிப்படையாக வைத்து பார்த்தால்கூட இந்த ஆண்டு லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனல் மா விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Spread the love