விருதுநகர், ஏப்.21
விருதுநகர் மாவட்டத்தில் 1250 ஏக்கரில் பயிரிடப்பட்ட துவரையில் விளைச்சல், விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, நரிக்குடி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதியில் ஊடு பயிராகவும், 50 சென்ட், 25 சென்ட் என சிறிய அளவிலும் 1250 ஏக்கரில் மானாவாரி பயிராக நாட்டு
துவரை பயிரிட்டனர். பருவம் கடந்து பெய்த மழை, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் இல்லை. எதிர்பார்த்த விலையும் கிடைக்காததால் விவசாயிகளுக்கு உழவு கூலி கூட
கிடைக்காமல் கவலையில் உள்ளனர். இதனால் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநில துவரைக்கு நல்ல விலை கிடைக்கிறது.
இது குறித்து சோலைகவுண்டம்பட்டி விவசாயி ஒருவர் கூறியதாவது : ஆடிபட்டம் அன்று 5 ஏக்கரில் மானாவாரி பயிராக நாட்டு துவரை விதைத்தேன். உழவு, நடவு, உரம் என ஏக்கருக்கு ரூ.10
ஆயிரம் செலவானது. பருவ மழை காலம் தாழ்ந்து பெய்ததால் விளைச்சல் இல்லை. கிலோ ரூ.50க்கு பருப்பு மண்டியில் விற்பனை செய்கிறோம். கிலோ ரூ.80க்கு மேல் விலை கிடைத்தால் தான்
நஷ்டத்தில் இருந்து ஓரளவு தப்ப இயலும், என்றார்.
இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் கூறுகையில், மாவட்டத்தில் பெரியளவில் துவரை சாகுபடி செய்வதில்லை. ஊடு பயிராக சிறிய அளவிலே சாகுபடி
செய்கின்றனர். நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு நேரடி கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும். உதவி தேவைப்படுவோர் வட்டார வேளாண் அலுவலரை