விழுப்புரம், ஜூன் 11
திருச்சி, விதைப் பரிசோதனை நிலையம், விதைப்பரிசோதனை அலுவலர், து.மனோன்மணி, கடந்த திங்கள்கிழமை விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலையத்தின் பணிகள் குறித்து திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு வரப்பெறும் விதை மாதிரிகளில் விதைகளின் முளைப்புத்திறன் சோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை மற்றும் பிற ரககலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக சான்று விதை மாதிரிகளில் பிற ரககலவன்கள் சரியான முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை உறுதி செய்தார். சான்று விதை மாதிரி 139 என்ற ஆய்வக எண் கொண்ட நெல் விதை மாதிரியில் உள்ள பிறரக கலவன்களை மறுஆய்வு செய்து பிற ரககலவன்கள் உள்ளதென உறுதிப்படுத்தினார். விதைப்பரிசோதனை தொடர்பான அனைத்து பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் விதைப்பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்திட பயன்படுத்தப்படும் உபகரணங்களின் செயல்பாடு குறித்த செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் இதுவரை சான்றுவிதை மாதிரிகள் 174 எண்களும், ஆய்வாளர்விதை மாதிரிகள் 48 எண்களும், பணிவிதை மாதிரிகள் 82 எண்களும், ஆக மொத்தம் 260 விதைமாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில் 25 விதைமாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. அவை தரமற்றவை தான் என்பதனை மீண்டும் ஆய்வு செய்து உறுதி செய்தார்.