May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும்

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல்

சென்னை, மார்ச் 14

தமிழகத்தில் இந்தாண்டு 6 லட்சம் ஏக்கர் கூடுதலாக பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாவும், விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும் எனவும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் வரும் சனிக்கிழமை தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் இயக்குநராக அலுவலகத்தில் மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக இதுவரை 250க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்கப்பட்டதாகவும், அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களின் தாக்கமாக தான் இந்த வேளாண் பட்ஜெட் அமையும் என தெரிவித்தார்.

மேலும் பயிர் சாகுபடி இந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் கூடுதலாக செய்யபட்டுள்ளதாகவும், 53 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறினார். தமிழகம் முழுவதும் 114 லட்சத்து 24 ஆயிரம் ஏக்கர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கரும்பு கொள்முதல் விலை உயர்த்தி கொடுத்ததையொட்டி கரும்பு சாகுபடியும் அதிகரித்துள்ளதாக கூறினார். பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்கப்பட்டுவிட்டதாகவும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் விடை கிடைக்கும் என தெரிவித்தார்.

Spread the love